நம்மைச் சுற்றி உள்ள பலவகையான பொருட்கள் அனைத்தும் மாறுபட்ட பொருட்களால் ஆக்கப்பட்டவை ஆகும் . பொதுவாக இவை திடம் , திரவம் , வாயு நிலைகளில் க...
நம்மைச் சுற்றி உள்ள பலவகையான பொருட்கள் அனைத்தும் மாறுபட்ட பொருட்களால் ஆக்கப்பட்டவை ஆகும். பொதுவாக இவை திடம் , திரவம் , வாயு நிலைகளில் காணப்படுகிறது.
பருப்பொருள் (Matter)
நிலை கொள்வதற்கு இடமும் நிறையும் கொண்ட அனைத்தையும் பொருள் அல்லது பருப்பொருள் என அழைக்கலாம்.
பல்வேறு நிலைகளை உடைய பொருட்களின் தன்மை.
அனைத்துப் பொருட்களும் மிகச்சிறிய நுண்ணிய துகள்களால் ஆனது. இத்துகள்களின் பண்புகள்.
1. பொருட்களின் அனைத்துப் பண்புகளும் இந்த துகள்களுக்கும் உண்டு.
2. துகள்களுக்கிடையே அகலம் உண்டு.
3. இத்துகள்கள் தொடர்ந்து இயங்குகின்றன.
4. இத்துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.
இத்துகள்களின் பண்புகள் வெவ்வேறு நிலைகளில் மாறுபடுகின்றன. திட நிலையில் பொருட்களின் துகள்கள் மிக நெருக்கமாக காணப்படுகிறது. திரவ நிலையில் துகள்களுக்கிடையே உள்ள அகலம் திட நிலையை விடக் கூடுதல்.வாயு நிலையில் துகள்களளுக்கிடையே உள்ள அகலம் மிக அதிகமாகக் காணப்படும்.திடம் , திரவம் , வாயு நிலைகளில் உள்ள துகள்களின் அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் நிலைமாற்றம். (Change of state)
பொருட்களின் துகள்களை வெப்பப்படுத்தப்படும் போதோ அல்லது குளிர்விக்கப்படும் போதோ அப்பொருட்கள் நிலைமாற்றத்திற்கு உட்படுகின்றன. பொருட்களின் நிலைமாற்றத்திற்கு வெப்பப்படுத்தலும் ஒரு காரணமாகும். நிலைமாற்றத்தின் ஒழுகு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வெப்பப்படுத்தும்போது வெப்பப்படுத்தும்போது
திடம் ------------------------------------------>திரவம் ------------------------------------------->வாயு
குளிர்வித்தல் குளிர்வித்தல்
வாயு ---------------->திரவம் ----------------> திடம்
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஆற்றலை ஏற்கிறது. இதன் காரணமாக துகள்களில் கீழ்காணும் மாறுதல்கள் ஏற்படுகிறது.
- ஆற்றல் அதிகரிக்கிறது.
- துகள்களுக்கிடையிலுள்ள அகலம் கூடுகிறது.
- இயக்க சுதந்திரம் அதிகரிக்கிறது.
- துகள்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு குறைகிறது.
பதங்கமாதல்: (Sublimation)
சில திடப்பொருட்களை சூடாக்கினால் திரவமாகாமல் நேரடியாக வாயு நிலையை அடையும் தன்மை பதங்கமாதல் (Sublimation) எனப்படும்.
உதாரணம் : கற்பூரம் , பாச்சா உருண்டை , அயோடின்.
திடமாக்கல்:
திரவம் அல்லது வாயு , திடநிலையை அடையும் நிகழ்வு. உதா : தண்ணீர் உறைதல்.
திரவமாக்கல்:
திடம் திரவமாக மாறும் நிகழ்வு. உதா : பனிக்கட்டி உருகுதல்.
குளிர்வித்தல்:
வாயு திரவமாக மாறும் நிகழ்வு. உதா : புற்களின் மேல் பனித்துளிகள் தோன்றுதல்.
ஆவியாதல்:
திரவம் வாயுவாக மாறும் நிகழ்வு. உதா : தண்ணீர் நீராவியாக மாறுதல்.
நிலைமாற்றம் நடைபெறும் சூழ்நிலைகள் :
பொருட்களின் தன்மை பகுதி 1 ஆண்லைன் பயிற்சி தேர்வு
பொருட்களின் தன்மை பகுதி 1 மதிப்பெண்கள்