மோகினி ஆட்டம் பார்த்த மாத்திரத்தில் நம்மை வசீகரிக்கும் ஒரு ஆடல் கலையாகும். மோகினி ஆட்டம் திருமால் பெண் உருவத்தில் அவதரித்த கதையைப் பாட...
- மோகினி ஆட்டம் பார்த்த மாத்திரத்தில் நம்மை வசீகரிக்கும் ஒரு ஆடல் கலையாகும்.
- மோகினி ஆட்டம் திருமால் பெண் உருவத்தில் அவதரித்த கதையைப் பாடுவது.
- மோகினி ஆட்டத்தில் அதிகமாக காணப்படும் சிருங்கார ரசமே, இணைவதால் ஏற்படும் ஆனந்தம், பிரிவதால் ஏற்படும் துயரம் என சிருங்கார ரசம் இருவகைப்படும்.
- இக்கலை தமிழ்நாட்டின் பரத நாட்டியத்தையும் கேரளத்தின் கதகளி யையும் தழுவி உருவாக்கப்பட்டது.
- 1800 ஆண்டுகளுக்கு முன் வடிவம் பெற்ற மோகினி ஆட்டத்திற்கு புதிய கலை வடிவம் கொடுத்தது திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ சுவாதி திருநாள் மகாராஜா.
- சுவாதித் திருநாள் கீர்த்தனைகள் என்னும் பெயரில் பாடப்பட்டு வரும் பாடல்களை இயற்றியது சுவாதி திருநாள் மகாராஜா.
- இசைக் கலைஞர்களான வடிவேலு, சிவானந்தம், சின்னையா, பொன்னையா போன்ற தஞ்சாவூர் சகோதரர்கள் சுவாதி திருநாள் மகாராஜாவின் அரச சபையில் இருந்தனர்.
- மோகினி ஆட்டக்கலை மற்றும் கேரளக் கலைகள் அழிந்து போகாமல் பாதுகாக்க கேரளக் கலாமண்டலத்தை உருவாக்கியவர் மகாகவி வள்ளத்தோள்.
- தனது வாழ்நாள் முழுவதும் மோகினி ஆட்டத்திற்காக வாழ்ந்து, மோகினி யாட்டத்தைக் கேரளத்தின் தனிச்சிறப்பான கலையாக அறிமுகப்படுத்த முயன்றவர் கல்யாணிக் குட்டியம்மா.
- மோகினி ஆட்ட சங்கிரஹம், மோகினி ஆட்டவரலாறும் ஆட்ட முறைகளும் என்ற இரண்டு நூல்கள் இக்கலையின் அடிப்படை இலக்கணமாகக் கருதப்பட வேண்டியவை.
- பெண்களினால் மட்டும் ஆடப்படும் மோகினி ஆட்டத்தின் ஆடை பொன்னிறமும், வெள்ளை அல்லது சந்தன நிறமும் கலந்த செட்டு முண்டு வகையைச் சார்ந்தது.
- இடுப்பில் தங்கம் அல்லது தங்கமுலாம் பூசப்பட்ட ஒட்டியாணம், கழுத்தில் காசுமாலை அல்லது நீண்ட தங்கமாலை, அட்டிகை, கங்கணம், வளையல்கள், மோதிரங்கள், பெரிய ஜிமிக்கி, தோடுகள், பெரிய மாட்டல்கள் ஆகியவை இக்கலையின் முக்கிய ஆபரணங்கள்.
- இடதுபக்கமாகக் கொண்டை அதில் மல்லிகை பூ சூடி, தலை வகிடில் சிவப்புக் கல்லும், முத்தும் பதித்த நெற்றிச்சுட்டி, தலையின் வலது பக்கம் சூரியப்பிறை இடதுபக்கம் சந்திரப்பிற இது இக்கலையின் தலை அலங்காரம்.
- மோகினி ஆட்டத்தின் ஒப்பனையாக அதரங்களில் சிவப்பு நிறம், அடர்த்தியாக புருவம், விழிகளில் கருப்பு மை, நெற்றியில் பெரிய செந்தூரப் பொட்டு, மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு காணப்படும்.
- அன்னம், மயில், குயில், பாம்பு, தவளை போன்ற ஐந்து நிலைகளில் ஆடப்படும் இக்கலை, மேடையைப் பாதங்கள் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் மென்மையாக நிகழ்த்தப்படும்.
- சிறிய குழித்தளம், சுத்த மத்தளம், வீணை, வயலின், புல்லாங்குழல் போன்றவை இக்கலையின் இசைக்கருவிகள்.
- ஒருவரோ அல்லது இரண்டு மூன்று பெண்களோ சேர்ந்து ஆடும் இக்கலையின் பாடல்கள் பெரும்பாலும் மலையாளத்திலும், சம்ஸ்கிருதத்திலும் சில சமயங்களில் ஹிந்தியிலும் பாடப்படும்.
மோகினியாட்டம் பாடத்தின் ஆன்லைன் வினா-விடை லிங்க்