ஜாதவ் மொலாய் பாயெங் ஒரு பிரமாண்டமான அடர்ந்த பசுமை வனத்தை உருவாக்கிய சாதனைக்காக ஜாதவிற்கு 2015 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது . 1360 ஏக்...
ஜாதவ் மொலாய் பாயெங்
பயிற்சி வினாக்கள் : -
1. ஜாதவின் முழுப்பெயர் என்ன?
2. ஜாதவ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
3. மணல் காட்டை பசுமைக் காடாக மாற்ற நினைத்த ஜாதவ் முதலில் அங்கே எந்த மரத்தை நட்டு வளர்த்தார்?
4.ஜாதவ் அவர்களுக்குக் கிடைத்த பரிசு ?
5. உலகில் நதியின் நடுவில் இருக்கும் தீவுகளில் மிகப்பெரிய தீவு எது?
6. ஜாதவ் எவ்வளவு ஏக்கர் நிலப்பரப்பில் காட்டை உருவாக்கினார்?
7. ஜோர்க்காட்டில் மண்ணை வளப்படுத்த ஜாதவ் அங்கே என்னென்ன உயிரினங்களை விட்டார்?
8. ஜாதவ் உருவாக்கிய காட்டின் பெயர் என்ன?
9. பத்மஸ்ரீ விருது எந்த வருடத்திலிருந்து வழங்கப்படுகிறது?
10. மணல்த் தீவை பசுமைத் தீவாக மாற்ற நினைத்தபோது ஜாதவின் வயது எத்தனை?
- ஒரு பிரமாண்டமான அடர்ந்த பசுமை வனத்தை உருவாக்கிய சாதனைக்காக ஜாதவிற்கு 2015 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- 1360 ஏக்கர் நிலப்பரப்புள்ள காட்டை தனி மனிதனாக நின்று உருவாக்கினார்.
- இக்காட்டில் யானைகள், புலிகள், மான்கள், காண்டாமிருகங்கள், குரங்குகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.
- 1979 இல் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து மணல்திட்டை மூழ்கடித்துப் பாய்ந்ததில் அடித்துவரப்பட்ட மிருகங்கள், பாம்புகள் செத்தும் சாகாமலும் ஒதுங்கியிருந்தன. சூரிய ஒளியின் வெப்பம் தாங்காமல் நிழலுக்காக பாம்புகள் புதரை தேடிக்கொண்டிருந்ததைக் கண்டான். வெயில் தாளாமல் பாம்புகள் துடிதுடித்து இறந்து போவதைக் கண்ட 16 வயது சிறுவன் ஜாதவ் குலுங்கி குலுங்கி அழுதான்.
- ஒரு புல், பூண்டு இல்லாமல் போனதால்தானே இந்த வாயில்லா ஜீவன்கள் செத்துப்போயின. பூமி வறண்டு போனால் மனிதர்களும் இப்படித் துடிதுடித்துச் சாகணும்தானே! இந்த பொட்டல் மணல் காட்டை பசுமைக்காடாக மாற்றுகிறேன் என சபதமெடுத்தான்.
- மூங்கில் தளிர்களையும், பல்வகை மரங்களின் தளிர்களையும் அத்தீவில் நட்டு வளர்த்தான். மண் வளத்தைப் பெருக்க சிவப்பு எறும்புகள், கரையான்கள், மண்புழுக்களை சேகரித்து அத்தீவில் விட்டு மண்ணை வளமாக்கினான்.
- யானைகளின் அபாயம் காரணமாக காட்டை அழிக்க மக்கள் ஒன்று கூடியபோது என்னைக் கொன்றுவிட்டு காட்டை அழியுங்கள் என்று எதிர்த்து நின்று காட்டைப் பாதுகாத்தார்.
- ஜாதவ் வளர்த்துவிட்ட வனம் பற்றி வெளியுலகத்திற்குத் தெரிந்த ஆண்டு 2008.
- புதிய வனம் மொலாய் காடு எனப்பெயர் பெற்றது.
- உலகில் நதியின் நடுவே இருக்கும் தீவுகளில் முஜூலி தீவுதான் பெரியது.
- 1853 இல் 1246 சதுர கிலோமீட்டர் இருந்த தீவு இப்போது 550 ச.கீ. மீட்டராக உள்ளது.
- அஸ்ஸாமில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் முஜூலி தீவு உள்ளது.
- உலகிலேயே நதியின் நடுவே அமைந்திருக்கும் மிகப்பெரிய காடும் தீவும் இதுதான்.
- "காடுகளின் மனிதன் ஜாதவ்" தன் மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்களுடன் அந்தக் காட்டில் வாழ்ந்து வருகிறார்.
- ஜாதவ் உலகிற்கு கொடுத்த அன்பளிப்பு பல்லாயிரம் கோடி மரங்கள்; மரங்கள் வெளியிடும் பல்லாயிரம் கனஅடி ஆக்ஸிஜன்.
- 2015 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது, காடுகளின் மனிதன் (Forest Man of India) மேலும் பல்வேறு பல்கலைக் கழக விருதுகள்.
பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. இவ்விருது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு கொடுக்கப்படும்.
இந்திய அரசின் நான்கு உயரிய குடியியல் விருதுகள் :
- பாரத ரத்னா
- பத்மவிபூஷன்
- பத்ம பூஷன்
- பத்மஸ்ரீ
1. ஜாதவின் முழுப்பெயர் என்ன?
2. ஜாதவ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
3. மணல் காட்டை பசுமைக் காடாக மாற்ற நினைத்த ஜாதவ் முதலில் அங்கே எந்த மரத்தை நட்டு வளர்த்தார்?
4.ஜாதவ் அவர்களுக்குக் கிடைத்த பரிசு ?
5. உலகில் நதியின் நடுவில் இருக்கும் தீவுகளில் மிகப்பெரிய தீவு எது?
6. ஜாதவ் எவ்வளவு ஏக்கர் நிலப்பரப்பில் காட்டை உருவாக்கினார்?
7. ஜோர்க்காட்டில் மண்ணை வளப்படுத்த ஜாதவ் அங்கே என்னென்ன உயிரினங்களை விட்டார்?
8. ஜாதவ் உருவாக்கிய காட்டின் பெயர் என்ன?
9. பத்மஸ்ரீ விருது எந்த வருடத்திலிருந்து வழங்கப்படுகிறது?
10. மணல்த் தீவை பசுமைத் தீவாக மாற்ற நினைத்தபோது ஜாதவின் வயது எத்தனை?
பயிற்சி வினா- விடை : இங்கே சொடுக்கவும்