காலச்சூழல் தமிழகச் சுற்றுச் சூழல் : இந்த 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் சிக்கல்களே உலகின் தலையாய சிக்கல்களாக இருக்கும். கடும் வெயில் முதல்...
காலச்சூழல்
தமிழகச் சுற்றுச் சூழல் :
இந்த 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் சிக்கல்களே உலகின் தலையாய சிக்கல்களாக இருக்கும். கடும் வெயில் முதல் உயிர்களை அள்ளிச் செல்லும் பலவிதமான நோய்களுக்குப் பெரும் காரணமாக இச்சுற்றுச் சூழல் சீர்கேடுகள் அமைகின்றன. இந்த சீர்கேடுகள் எதனால் ஏற்படுகின்றன என்ற வினாவும் அதனை எவ்வாறு சரிசெய்வது என்ற விழிப்புணர்வும் நம்மிடையே ஏற்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளவும் வேண்டும். அப்பொழுதுதான் நலமோடு வாழமுடியும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா.நம் பாடப்பகுதியில் சங்க காலத்தில் இருந்த இயற்கை வாழ்வியல் முறைகளையும் தற்காலத்தில் உள்ள இயற்கையின் நிலையையும் பற்றி பார்ப்போம்.
சங்ககால இயற்கை வாழ்வியல் முறைகள் :
தமிழ்மொழியில் கிடைத்த முதல் நூலான தொல்காப்பியம் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை தெளிவாக கூறுகிறது.உயிர்ம நேயச் செயல்கள் வாழ்க்கையோடு இணைந்து இருந்தன. (எ.கா: முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்த பாரி; மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்.)
ஐவகை நிலங்களின் பகுப்பு வாழ்கின்ற சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது.
திணையியல் ஒழுக்கத்திற்கு மரஞ்செடி கொடிகளின் பெயர்களை குறியீடாகக் கூறியுள்ளனர்.
முற்றத்தில் நிழல் தரும் கொடிகளை செழிப்பாக வளர்த்தனர். அதனடியில் யானை வேட்டுவன் படுத்து உறங்கியதைக் கூறுகிறது புறநானூற்றுப் பாடல்.
சோலைக் காடுகளின் செழிப்பை கலித்தொகை காட்டுகிறது.
தற்கால இயற்கை வாழ்வியல் முறைகள் :
நீரோடைகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் வறண்டு போய்விட்டன.சிறிய மலைக் குன்றுகளைக் கூட வெட்டி கற்பாறைகளாக விற்பனை செய்யும் அளவிற்கு மக்கள் மாறிவிட்டனர்.
மலைவாழ் சுற்றுலாத் தலங்களான ஊட்டியும், கொடைக்கானலும் மரங்களை இழந்து நிற்கின்றன.
நெற்களஞ்சியங்கள் மேலை நாட்டினரின் சுவைக்கான இறால் களஞ்சியங்களாகின்றன.
திண்டுக்கல்லும் வாணியம்பாடியும் தோலாலைக் கழிவுகளினால் தம் வளமையைத் தொலைத்து நச்சுப் பரப்புகளாகக் கிடக்கின்றன.
தொல்காப்பியர் கூறும் கருப்பொருட்கள் (ஐவகை நிலங்களுக்கும்)
1. தெய்வம் 8. ஊர்2. மக்கள், மாமக்கள் 9. நீர்நிலை
3. உணவு 10. பறை
4. விலங்கு 11. யாழ்
5. பூ 12. பண்
6. மரம் 13. தொழில்
7. பறவை