கருங்காற் குறிஞ்சி குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மலரும். குறிஞ்சி , மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1600 மீட்டர் உயரத்தில் மழை காடுகள...
கருங்காற் குறிஞ்சி
- குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மலரும்.
- குறிஞ்சி , மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1600 மீட்டர் உயரத்தில் மழை காடுகளும் புல்வெளிகளும் இணைந்திருக்கும் பிரதேசங்களில் செழித்து வளரும் ஒரு புதர்ச்செடி.
- நீலகிரி முதல் சயாந்திரி மலைகள் வரை, மலைச்சரிவுகளில் புதர்களாகவும் குற்றுமரங்களாகவும் வளர்கின்றன.
- குறிஞ்சி மலர்கள் நீல வண்ணமானது. மஞ்சள் நிறப் பூப்பூக்கும் ஓர் அரிய குறிஞ்சி வகையும் உண்டு.
- ஒவ்வொரு செடியும் ஒரே ஒரு முறைதான் மலரும் .பூக்கும் காலம் முடிந்ததும் அச்செடி பட்டுப்போகும். உரிய காலத்தில் அதே இடத்தில் புதிய செடிகள் முளைக்கும்.
- கேம்பிள் என்ற தாவரவியலாளர் 46 வகை குறிஞ்சி செடிகள் உண்டு என்பார்.
- நீலகிரியில் பூக்கும் குறிஞ்சியைத் தமிழ் மக்கள் நீலக்குறிஞ்சி என்று குறிப்பிடுவர்.
- இச்செடி ஏறக்குறைய ஒரு மீட்டர் உயரம் இருக்கும் . தண்டு சிகப்பாகவும் காம்புகளின் கணுக்கள் கருப்பாகவும் இருக்கும்.
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சி, "கருங்காற் குறிஞ்சி" என்று இத்தாவரத்தைக் குறிப்பிடுகின்றது.
- இம் மலர்ச்செடி முக்குறுத்தி சரணாலயப் பகுதியில் , மஞ்சூர் மலைகளில் ,மணவூர் அருகில் , மாட்டுப்பட்டி ,குண்டுமலை , குண்டலை , ஆனைமுடி என்ற சிகரத்தை சூழ்ந்த பகுதிகளிலும் ஏராளமாக காணப்படுகின்றது.
- ஆனைமுடி தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்.
- மற்றெல்லாத் தேனிலும் சிறந்ததாகப் போற்றப்படும் குறிஞ்சித் தேனை, குறிஞ்சி நாடனின் நட்புக்கு ஒப்புமையாக "குறுந்தொகை" குறிப்பிடுகின்றது.
- மூணாறு மலைகளில் வாழும் தமிழும் மலையாளமும் கலந்த மொழி பேசும் முதுவர் எனும் பழங்குடியினர், குறிஞ்சி மலர்வதைக் கொண்டே தங்கள் வயதினைக் கணக்கிடுகின்றனர்.
- அரிய உயிரினமான வரையாடுகள் மலைமுகடுகளில் பாறைகளிடையே வாழ்கின்றன.
பயிற்சி வினா - விடை : இங்கே சொடுக்கவும்
Students Responces :