அலகு 1 இனிய வாழ்வு கசப்பும் இனிப்பும் உடல்நலம் : வேப்பிலை, துளசி போன்ற மூலிகை இலைகளை, மனதில் எண்ணி, அளவோடு உண்டால் அவை உடல் நலத்தைக் காக...
அலகு 1
இனிய வாழ்வு
கசப்பும் இனிப்பும்
உடல்நலம் :
- வேப்பிலை, துளசி போன்ற மூலிகை இலைகளை, மனதில் எண்ணி, அளவோடு உண்டால் அவை உடல் நலத்தைக் காக்கும்.
- காய்கறிகளுள் ஒன்றான பாகற்காய் கசப்பானது. ஆனால் அதை உண்டு பழகினால் சுவையாக மாறும்.
- நாவிற்கு, சுவை கருதியும் சோற்றைக் கருதியும், அளவுக்கு அதிகமாக உண்டு வாழாமல், அளவோடு உண்டு, ஆரோக்கியமான உடல் நலத்துக்காக வாழ வேண்டும்.
- நாம் நாவை அடக்கி, அளவோடு உண்டால் எமனை வெல்லும் ஆற்றலைப் பெறலாம்.
- நாவின் சுவைக்காக, அதிகமாக உணவை விரும்பி உண்டால், நோய் நம்மைத் தாக்கும்.
- நாம் நாவைக் கொஞ்சம் அடக்கி வாழ்ந்தால், நம் சுற்றத்தோடு கூடி, நோயின்றி, நீண்ட நாள் வாழலாம்.
* பயிற்சி வினா ௱ விடை : இங்கே சொடுக்கவும்