அழகுநிலா 9 AT செவ்வானம் பழந்தமிழக இயற்கை மருதம் வயலும் வயல் சார்ந்த இடம் மருதம். நீர் வளம் நிறைந்த பகுதி. நெருக்கமாக நிற்கும் மருத மரங்களில்...
![]() |
அழகுநிலா 9 AT |
செவ்வானம்
பழந்தமிழக இயற்கை
மருதம்- வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்.
- நீர் வளம் நிறைந்த பகுதி.
- நெருக்கமாக நிற்கும் மருத மரங்களில் பறவைகள் தங்கி ஒலி எழுப்பும்.
- மணல் நிறைந்த பெருந்துறைகளில் விளையாடும் இளம்பெண்களால் பூவும் தளிரும் பறிக்கப்பட்டு காஞ்சி மரங்கள் சிதைந்து காட்சியளிக்கின்றன.
- முருக்க மரங்களில் இருந்து விழும் பூக்கள் நெருப்பு போல் தோற்றமளிக்கும்.
- கழனிக்கு ( வயல்) அருகே உள்ள பொய்கையில் (குளம்) அழல் (நெருப்பயிற்சி வினா விடை - இங்கே சொடுக்கவும்.பயிற்சி வினா விடை - இங்கே சொடுக்கவும்.பு) போன்ற தாமரை மலர்களும் ஆம்பல் மலர்களும் நிறைந்திருக்கும் . நாரைபோன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
- இத்தகைய அழகான காட்சிகளைக் கொண்டது அகன்றலை நாடு.
- மருதநிலத்தில் நீர்வளம் இருப்பதால் எக்காலத்தும் கரும்பு முற்றிக் கிடக்கும்.
- தேன் சொரிய நின்ற மருத மரங்களை, பாய்ந்து வரும் சிவந்த புது வெள்ளம் அடியோடு சாய்க்கும்.
- உயரமும் உறுதியும் பொருந்திய அணைகளை உருவாக்கி, நீரைத் தடுத்து, வெற்றி கண்ட மகிழ்ச்சியுடன் , மக்கள் கூட்டம் மூதூர்க்கண் நிகழும் திருவிழாவைக் கண்டு மீள்வர்.
- காடும் காடு சார்ந்த இடம் முல்லை.
- காடுகளில் பலவகையான பூக்கள் உதிர்ந்து வாடிக் கிடக்கும்.
- காடுகள் பயன் பல அளிக்கும் தன்மையினின்று திரிந்து, செவ்வரக்குப் போன்ற மண் குன்றுகளைக் கொண்டு விளங்கும்.
- முல்லை நிலத்துப் பெண்கள் காலில் செருப்பணிந்து அப்பகுதியில் திரிவர்.
குறிஞ்சி
நெய்தல்
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி.
- காந்தள் பூவால் ஆன கண்ணியினை (மாலை) தலையில் அணிந்த வேட்டுவர்கள், ஆமாவின் (காட்டுப் பசு) இறைச்சியையும், யானையின் தந்தத்தையும் வேட்டையாடிக் கொண்டு வருவர்.
- வேடர்கள் பொன்னுடை கடைத்தெருக்களில் சென்று இறைச்சியையும், தந்தத்தையும் கொடுத்து விட்டு அதற்கு ஈடாக பொன்னைப் பெறாமல், கள்ளை வாங்கி உண்பர்.
- வில்லும் அம்பும் கொண்டு விலங்குகளை வேட்டையாடித் திரியும் பண்பினர் குன்றக் குறவர்.
- குறவர் தம் மனைகளை வரகின் வைக்கோலால் வேய்ந்திருப்பர் . அவர்கள் தொழில் தினைக் கொல்லையை உழுது பயிர் செய்வது.
- வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கருப்புக் கட்டியைப் பொடி செய்து கொழித்தெடுத்த நுட்பமான பூமி போலும் தோற்றமுடைய திணை மாவை அன்புடன் அளித்து மகிழ்வர்.
நெய்தல்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல்.
- ஞாழல் எனப்படும் புலி நகக் கொன்றை மரங்கள் நிறைந்த பெரிய துறைகளை உடையது.
- கரிய இதழ்களுடைய நெய்தற் பூக்கள் குளிர்ந்த கழிக்கண் மலர்ந்திருக்கும். கழிகளில் மீன் வட்டமாடும் . புன்னை மரக்கிளைகளில் நாரை முதலிய பறவைகள் காணப்படும்.
- மக்கள் சென்று தங்கக்கூடிய கானற் சோலைகளில் அடம்பங் கொடிகள் வளர்ந்திருக்கும.
- வளமார்ந்த நெய்தல் நிலத்தில், அந்த நில மக்கள் முத்து மற்றும் பவளத்தை மிக எளிதில் எடுத்துச் செல்வர்.
- முல்லையும் குறிஞ்சியும் தன் இயல்பில் திரிதல் பாலை எனப்படும் . (அல்லது)
- மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை எனப்படும்.