கல்லில் இழைத்த வண்ணங்கள் கிழவி அளித்த நிழல் தஞ்சைப் பெரிய கோயிலை உருவாக்கியவர் மாமன்னர் இராஜராஜ சோழன். இராஜராஜ சோழனை மும்முடிச்சோழன் என்று...
கல்லில் இழைத்த வண்ணங்கள்
கிழவி அளித்த நிழல்
- தஞ்சைப் பெரிய கோயிலை உருவாக்கியவர் மாமன்னர் இராஜராஜ சோழன்.
- இராஜராஜ சோழனை மும்முடிச்சோழன் என்றும் அழைப்பர்.
- தட்சிண மேருவான, தஞ்சைப் பெரிய கோயிலில் குடியிருக்கும் இறைவன் சிவபெருமான்.
- தஞ்சைப் பெரிய கோயில் சோழ, சேர,பாண்டிய, பல்லவ நாடுகளிலுள்ள மற்ற கோயில்களை விட மிகப் பெரியது.
- இக்கோயிலில் உள்ள விமானத்தளக் கல் 100 யானையின் பலம் கொண்டது.
- இக்கல்லை கோபுரத்தின் உச்சியில் ஏற்ற அரைக்காத தூரத்திற்கு சாரம் கட்டி, நூற்றுக்கணக்கான ஆட்களால் உருட்டி கொண்டு சென்று பொருத்தப்பட்டது.
- சாரம் கட்ட ஆரம்பித்த ஊரை இன்று மக்கள் சாரப்பள்ளம் என்று அழைக்கிறார்கள்.
- விமானத்தளத்தின் நான்கு மூலையிலும், 6 அடி நீளம், 5 அடி அகலமுள்ள நந்திச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
- மலைகள் ஏதும் இல்லாத தஞ்சையில் வெகுதூரத்திலிருந்து கருங்கற்களை கொண்டு வந்து அற்புதமான சிற்பங்களை உருவாக்கியுள்ளனர் சிற்பிகள்.
- இராஜராஜ சோழனின் பாட்டி பெயர் செம்பியன் மாதேவியார்.
- கோயிலுக்கு உபாயம் கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டில்
- பொறிக்கப்பட்டுள்ளன.
- வெயில் வேளையில் நா வறட்சியால் வாடும் சிற்பிகளுக்கு இலவசமாக மோர் அளித்து உபசரிப்பவள் வந்திக் கிழவி.
- வந்திப் பாட்டியின் வாசற்படியாக இருந்த கல்தான், தஞ்சைப் பெரிய கோயிலின் பிரம்மரந்திரக் குழியை மூடப் பயன்படுத்தி உள்ளனர்.
- தஞ்சைப் பெரிய கோயில், மண்ணிலிருந்து விண்ணை முட்டும் கல்லால் ஆன கோயில்.
- இக்கோயிலில் 13 மாடங்களில் கோபுரம். கோபுரத்தின் நிழல் கீழே எங்கும் விழாது.
- இக்கோபுரத்தின் உட்புறத் திருச்சுற்றில் சிவபெருமானின் 108 திருத்தாண்டவ சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
- ஒரே கல்லால் ஆன விமானம். அதன் மீது 3000 பொன்னாலான பொற்கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சியில் தட்சிண கயிலாயம் என்ற திருக்கோயிலை எழுப்பியுள்ளார்.
- தட்சிண கயிலாயம் கருங்கல்லாலும் மணற்கல்லாலும் உருவாக்கப்பட்டது.
பயிற்சி வினா - விடை : இங்கே சொடுக்கவும்