f-பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் : லாந்தனத்திற்கும் ஆக்டினியத்திற்கும் பின்னர் அவரும் 14 தனிமங்கள் ஆவர்த்தன அட்டவணையில் கீழே இரண்டு வரி...
f-பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் :
- லாந்தனத்திற்கும் ஆக்டினியத்திற்கும் பின்னர் அவரும் 14 தனிமங்கள் ஆவர்த்தன அட்டவணையில் கீழே இரண்டு வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இத்தனிமங்களே f-பிளாக் தனிமங்கள்.
- இவற்றில் எலக்ட்ரான் நிரப்புதல் நடைபெறுவது கடைசி ஷெல்லிற்கு சற்று முன்னால் உள்ள ஷெல்லிற்கும் முந்தைய செல்லில் ஆகும்.
- முதல் வரிசையில் உள்ளவை லாந்தனைடுகள் என்றும் இரண்டாவது வரிசையிலுள்ளவை ஆக்டினைடுகள் என்றும் அறியப்படுகிறது.
- லாந்தனைடுகள் 6 -ஆம் ஆவர்தனத்தையும், ஆக்டினைடுகள் 7-ஆம் ஆவர்தனத்தையும் சார்ந்தது.
- d பிளாக் தனிமங்களைப் போன்று இவற்றில் பெரும்பாலும் வேறுபட்ட ஆக்சிஜனேற்ற நிலைகளைக் காட்டுகின்றன.
- ஆக்டினைடுகளில் பெரும்பாலானவையும் கதிர் இயக்கத்தனிமங்களாகும். இவற்றில் பல செயற்கைத் தனிமங்களாகும்.
- யுரேனியம்(U) , தோரியம்(Th), புளுட்டோனியம்(Pu) போன்றவை அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இவற்றில் பலதனிமங்களும் வினையூக்கிகளாகப் பெட்ரோலியம் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன.
- மோனசைட்,இல்மனைட், சிர்க்கான், ரூட்டைல் போன்ற பல்வேறு கனிமங்களின் கலவைகள் கேரளக்கடற்கரை மணலில் அதிகமாகக் காணப்படுகின்றது.
- டைட்டானியம் டை ஆக்ஸைடு(TiO2) தயாரித்தலுக்கு உதவும் கட்சாப் பொருள் இல்மனைட் ஆகும்
- பிரீடர் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் தோரியத்தின் உறைவிடம் மோனசைட் ஆகும்.
- நியோடிமியம்(Nd) என்ற உலோகம் உற்பத்தி செய்வதற்கான கட்சாப் பொருள் மோனசைட் ஆகும். இந்த நியோடிமியம் ஆற்றல் மிக்கதும் , எடை குறைந்ததுமான காந்தங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- சிக்கி முக்கி கால்கள் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஸீரியம்(Ce) என்ற உலோகத்தின் கனிமம் மோனசைட் ஆகும்.
Students Responces :