p பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் : ஆவர்த்தன அட்டவணையில் p பிளாக் தனிமங்கள் 13 முதல் 18 வரை உள்ள தொகுதிகளில் உட்படுகின்றது. P பிளாக்கில்...
p பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் :
- ஆவர்த்தன அட்டவணையில் p பிளாக் தனிமங்கள் 13 முதல் 18 வரை உள்ள தொகுதிகளில் உட்படுகின்றது.
- P பிளாக்கில் உலோகங்கள், அலோகங்கள், உலோகப்போலிகள் , வினை புரியாத்தனிமங்கள் அடங்கும்.
- வேறுபட்ட பிரிவுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் தனிமங்கள் p பிளாக்கில் உள்ளன.
- சாதாரண வெப்பநிலையில் திடம், திரவம், வாயு ஆகிய நிலைகளில் உள்ள தனிமங்கள் இதில் உட்படுகின்றன.
- s பிளாக் தனிமங்களை விட p பிளாக் தனிமங்கள் பொதுவாக உயர்ந்த அயனியாக்கும் ஆற்றலைக் காட்டுகிறது
- 2-ஆம் ஆவர்தனத்தில் அயனியாக்க ஆற்றல் கூடிய தனிமம் F ஆகும்.
- 3-ஆம் ஆவர்தனத்தில் அயனியாக்க ஆற்றல் கூடிய தனிமம் Cl ஆகும்.
- p பிளாக் தனிமங்களுக்கு எதிர் மின்னேற்றத்தன்மை மிக அதிகம்.
- 17-ஆம் தொகுதியில் எதிர் மின்னேற்றத்தன்மை மிகக்கூடிய தனிமம் F ஆகும்.