பத்தாம் வகுப்பு - வேதியியல் Part - 2 துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பை பதிவு செய்ய மற்றொரு முறை , d பிளாக்தனிமங்களின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்...
Part - 2
துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பை பதிவு செய்ய மற்றொரு முறை , d பிளாக்தனிமங்களின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு
துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பை பதிவு செய்ய மற்றொரு முறை:
உயர்ந்த அணு எண்ணுடையத்தனிமங்களின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பை எழுதும் போது , அந்த தனிமத்திற்கு சற்று முன்னாள் உள்ள வினைபுரியா தனிமத்தின் (மந்த வாயு தனிமத்தின் ) குறியீட்டை அடைப்புகுறியில் எழுதி தொடர்ந்து துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பை எழுத வேண்டும்.
தனிமம் | துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு |
11Na | [Ne] 3s1 |
12Mg | [Ne] 3s2 |
19K | [Ar] 4s1 |
20Ca | [Ar] 4s2 |
21Sc | [Ar] 3d14s2 |
27Co | [Ar] 3d74s2 |
30Zn | [Ar] 3d104s2 |
d பிளாக் தனிமங்களின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு:
1. கடைசி எலக்ட்ரான் எந்தத்துணை ஷெல்லில் நிரம்புகிறதோ அந்தத்துணை ஷெல்லே தனிமம் உட்படும் பிளாக்.
எடுத்துக்காட்டு : ஸ்காண்டியம் ( 21Sc) தின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s2 2p6 3s2 3p6 3d1 4s2, இதில் கடைசி எலக்ட்ரான் d துணை ஷெல்லில் நிரம்புவதால் இதன் பிளாக் d ஆகும்
2. d பிளாக் 3 முதல் 12 வரையுள்ள தொகுதிகளை கொண்டது.
3. குரோமியம் , காப்பர் போன்ற அணுக்களின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்புகளில் d துணை ஷெல் பாதி நிரம்பியதோ அல்லது முழுவதும் நிரம்பியதோ ஆன நிலை அதிக நிலைத்தன்மையைக்காட்டுகிறது
எடுத்துக்காட்டு : குரோமியம் (24Cr) துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு : 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 (d துணை ஷெல் பாதி நிரம்பியது)
காப்பர்(29Cu) துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு ; 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 (d துணை ஷெல் முழுவதும் நிரம்பியது)
4. d பிளாக் தனிமங்களின் தொகுதியை அறிய கடைசி இரண்டு துணை ஷெல்களின் எலக்ட்ரானை கூட்டினால் போதும்
எடுத்துக்காட்டு: இரும்பு (26Fe) துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு : 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 ,இதன் பிளாக் 6+2=8
தனிமம் | குறியீடு | அணு எண் | எலக்ட்ரான் கட்டமைப்பு | துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு | பிளாக் | ஆவர்த்தனம்
| தொகுதி
|
ஸ்காண்டியம் | 21Sc | 21 | 2,8,9,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2 | d | 4 | 3 |
டைட்டானியம் | 22Ti | 22 | 2,8,10,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2 | d | 4 | 4 |
வனேடியம் | 23V | 23 | 2,8,11,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2 | d | 4 | 5 |
குரோமியம் | 24Cr | 24 | 2,8,13,1 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 | d | 4 | 6 |
மாங்கனீஸ் | 25Mn | 25 | 2,8,13,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2 | d | 4 | 7 |
இரும்பு | 26Fe | 26 | 2,8,14,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 | d | 4 | 8 |
கோபால்ட் | 27Co | 27 | 2,8,15,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d7 4s2 | d | 4 | 9 |
நிக்கல் | 28Ni | 28 | 2,8,16,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2 | d | 4 | 10 |
காப்பர் | 29Cu | 29 | 2,8,18,1 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 | d | 4 | 11 |
சிங்க்
| 30Zn | 30 | 2,8,18,2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 | d | 4 | 12 |