வகுப்பு -10- உயிரியல்- படம்-1 தெரிந்து கொள்ளவும் எதிர்வினையாற்றவும் உயிரினங்களின் எதிர்வினைக்குக் காரணம...
வகுப்பு-10-உயிரியல்- படம்-1
தெரிந்து கொள்ளவும் எதிர்வினையாற்றவும்
- உயிரினங்களின் எதிர்வினைக்குக் காரணமான சுவை, தொடுதல், பசி, தாகம் போன்ற நிகழ்வுகளைத் தூண்டுதல் எனக்கூறலாம்.
- உடலில் தூண்டுதல்களை ஏற்றுக்கொள்வதற்கு தனிப்பட்ட ஏற்பி செல்கள் உள்ளன.
- எதிர் வினையாற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்வது நரம்புமண்டலமாகும்.
நரம்பு செல் :
- நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நரம்பு செல் அல்லது நியூரான் ஆகும்
நரம்பு செல்லின் அமைப்பும் வேலையும் :
- பெரும்பாலான நரம்பு செல்களின் ஆக்ஸான்கள் மயலின் என்ற கொழுப்பு நிறைந்த ஒரு உறையால் பொதியப்பட்டிருக்கின்றது. மயலின் உறை உருவாக்கப்பட்டிருப்பது ஷான் செல்களாகும்.
- மயலின் உறை பளபளப்பான வெண்மைநிறமுடையது.
- மூளையிலும் தண்டுவடத்திலும் மயலின் உறை ஒளிக்கோடென்ட்ரோசைட்டுகள் என்ற தனிப்பட்ட செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
- செல்களுக்கு பாதுகாப்பு அழிப்பது ஒளிக்கோடென்ட்ரோசைட்டுகளும் ஷான் செல்களும்.
- மூளையிலும், தண்டுவடத்திலும் மயலின் உறை அதிகமாகக்காணப்படும் பகுதி வைட்மேட்டர் என்றும் மயலின் உறை இல்லாத நரம்பு செல்லின் பகுதி கிரேமேட்டர் என்றும் அறியப்படுகின்றன.
மயலின் உறையின் வேலை :
- ஆக்ஸானுக்கு ஊட்டப்பொருட்களும் ஆக்சிஜனும் அளிக்கிறது.
- உள்ளத்துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது.
- மின்காப்பாகச் செயல்படுகிறது.
- வெளிப்புறக்காயங்களிலிருந்து ஆக்ஸானை பாதுகாக்கிறது.