மின்னோட்டத்தின் ஒளி விளைவு முன்காலங்களில் பெருமளவு இழை விளக்குகள் பயன்படுத்தப்பட்டன . வெப்பத்தால் ஒளிரும் விளக்குகள் (In...
மின்னோட்டத்தின் ஒளி விளைவு
முன்காலங்களில் பெருமளவு இழை விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.
வெப்பத்தால் ஒளிரும் விளக்குகள் (Incandescent lamps)
சாதாரண மின்னழுத்தத்தில் இழை விளக்குகளின் இழை செஞ்சூடடைந்து ஒளியைத் தருகிறது.
இத்தகைய மின்விளக்குகளை இன்கான்டசன்ட் (வெப்பத்தால் ஒளிரும்) விளக்குகள் என்று கூறுகிறார்கள்.
இதில் டங்ஸ்டன் உலோகத்தினால் தயாரிக்கப்பட்ட இழை பயன்படுத் தப்படுகிறது.
டங்ஸ்டனால் செஞ்சூடடைந்து வெண்மை ஒளியை அதிக நேரத்திற்கு வழங்க இயலும்.
இழை ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடை செய்யவதற்கு மின்விளக்கின் உட்பகுதி வெற்றிடமாக்கப்படுகிறது.
ஆவியாவதை பெருமளவு குறைப்பதற்கு மின்விளக்கில் குறைந்த அழுத்தத்தில் மந்த வாயு நிரப்பப்படுகிறது.
தற்போது சாதாரணமாக மந்த வாயுவிற்குப் பதிலாக நைட்ரஜன் வாயு நிரப்பப் படுகிறது.
எதற்காக நைட்ரஜன்?
சாதாரண வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் நைட்ரஜன் ஒரு மந்த வாயுவினைப் போன்று செயல்படுகிறது.
வெப்பநிலையிலுள்ள சிறிய உயர்வு நைட்ரஜன் விரிவடைவதை பாதிப்பதில்லை.
நைட்ரஜன் இயற்கையில் எளிதாகக் கிடைப்பதால் மின்விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.
மின்விளக்கினுள் வாயு இல்லாத போது இந்த வாயு முழுவதும் மந்த வாயுவாகச் செயல்படுகிறது.
எந்தச் சிறப்புகளால் டங்ஸ்டன் மின்னிழையாகப் பயன்படுத்தப்படுகிறது?
a) உயர்ந்த மின்தடை எண்.
b) உயர்ந்த உருகுநிலை.
c) மெல்லிய கம்பியாகும் தன்மை (High ductility).
d) செஞ்சூடடைந்து வெண்மை ஒளியை வெளிவிடுவதற்கான திறன்.
வெப்பத்தால் ஒளிரும் விளக்குகளில் மின்னிழையாக நிக்ரோம் பயன்படுத்தப்படுவ தில்லை. எதனால்?
நிக்ரோமிற்கு செஞ்சூடடைந்து வெண்மை ஒளியை வழங்கும் திறன் குறைவு.
பெருமளவு வெப்பத்தை வெளிவிடுவதால் வெளிவிடும் ஒளியின் அளவு மிகக்குறைவு.
மெல்லிய கம்பியாகும் தன்மை டங்ஸ்டனை விடக் குறைவு.
வெப்பத்தால் ஒளிரும் விளக்குகளில் கிடைக்கும் மின்னாற்றலின் பெரும்பகுதியும் வெப்பமாக இழக்கப்படுகிறது. இதனால் மின்விளக்கின் திறன் குறைகிறது.
ஆண்லைன் வினா விடைக்காக இங்கே சொடுக்கவும்
STUDENT’S RESPONSE