மின்னோட்டத்தின் ஒளி விளைவு பகுதி 3 LED பல்புகள் ஒளி உமிழும் டையோடுகளே LED கள் . இழைகள் இல்லாததினால் வெப்பவடிவத்திலுள்ள ...
மின்னோட்டத்தின் ஒளி விளைவு பகுதி 3
LED பல்புகள்
ஒளி உமிழும் டையோடுகளே LED கள்.
இழைகள் இல்லாததினால் வெப்பவடிவத்திலுள்ள ஆற்றல் இழப்பு
பாதரசம் இல்லாததினால் சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பில்லை.
நீண்ட ஆயுள் கொண்டது.
(உற்பத்தி, குறைகள் நீக்குதல், திரும்பப் பயன்படுத்துதல், அழித்தல்)
ஆற்றல் அதிகமானதும், சுற்றுப்புறமாசடைதல் குறைந்ததுமான பல்புகளுக்குரிய தேடுதல் தான் LED பல்புகளைக் கண்டறிய உதவின.
பிற பல்புகளை விட மேன்மையுள்ளது LED பல்புகள்.
LED பல்புகளின் மேன்மைகள்
குறைந்த மின்னோட்ட உபயோகம்,
அதிக திறன்.
நீண்ட ஆயுள்.
இதன் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்காக செலவு குறைந்த LED பல்புகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகளைக் குறைக்க, மீண்டும் பயன்படுத்தக் கூடிய முறையில் சிறிய குறைகளைத் தீர்க்கவும், உபயோகமற்ற LED களை அறிவியல் முறையில் அழிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
LEDபல்பின் பாகங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
பேஸ் யூனிட் E22
பல்பை கோள்டறுடன் இணைக்கும் உலோகப் பகுதி.
வெப்பசிங்க்
பல்பின் பேஸ் யூனிட்டோடு சேர்த்த பகுதி, வெப்பம் உறிஞ்சி எடுக்கும் உறை.
பேஸ் பிளேட்
கோள்டரில் இணைக்கும் உலோகத் தகடு.
பேக் கண்டக்டா் திருகாணிகள்
LED டிரைவரில் கடத்திகளை பேஸ் யூனிட்டுடன் இணைக்கும் திருகாணி.
பவா் சப்ளை போர்டு (LED driver)
ACமின்சாரத்தை DC யாக மாற்றி தேவையான அளவில்கொடுப்பது இதன் வேலை (5W, 7W,9W)பல்புகளுக்கு ஒரே போர்டைபயன்படுத்தலாம்.
பிரின்டட் மின் சுற்று போர்டு ( LED சிப் போர்டு)
LED கள் பொருத்தப்பட்டிருக்கும் போர்டில் +, - துருவங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.
பரவுதல் கப் (diffuser)
இது பல்பிலிருந்து ஒளியை வெளியேற்றும் பகுதி.
முழுமையான LED மின்சுற்று
LED பல்பு உருவாக்கத் தேவையான் கருவிகள்
உற்பத்தி செய்தல்
பேஸ் யூனிட்டை வெப்ப சிங்கில் பஞ்ச் செய்து இணைக்க வேண்டும்.
பவர் சப்ளை போர்டில் இன்புட், அவுட்புட் கம்பிகள் வெளியில் காணும் முறையில் போர்டில் தூசியும் ஈரமும் வராமலிருக்க இன்சுலேஷன் டாப் சுற்ற வேண்டும்.
பவர் சப்பிளை போர்டில் உள்ள இன்புட் பாகத்தில் காணும் கம்பிகள் கீட் சிங்க், டெர்மினல் துளை என்பவற்றின் வழியாகக் கடத்தி பேக் கண்டக்டரில் பொருத்த வேண்டும்.
அவுட்புட்டில் உள்ள சிவப்பு நிற கம்பியைப் பிரின்டட் மின்சுற்று போர்டில் + என்று அடையாளப்படுத்திய பாகத்திலும் கருப்பு நிற கம்பியை - என்று அடையாளப்படுத்திய பாகத்திலும் இணைக்கவும்.
LED பிரின்டட் மின்சுற்றில் போர்டின் பின்பகுதியில் கீட் சிங்க் காம்பவுண்டு பூசிய பின் பேஸ் பிளேட்டில் பொருத்தவும்.
கீட் சிங்க்கை டிபியூசர் உபயோகித்து இறுக மூடவும்.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட LED பல்பை கோள்டரில் இணைத்து ஒளிருகிறது என உறுதிப்படுத்த வேண்டும்.
LED பல்புகளின் குறைபாடுகளைச் சரிசெய்தல்
ஒரு LED பல்பு பல்வேறு ஒளி உமிழ் டையோடின் தொடர் இணைப்பாகும்.
தொடர் இணைப்பில் எங்கேயாவது தொடர்பு இல்லாமல் ஆனாலும் எதாவது டயோடு செயல்படாமலிருந்தாலும் பல்பு ஒளிராது.
ஒரு LED பல்பில் உள்ள அலை திருத்தி, லோடு மின்தடை, பில்டர் கப்பாசிட்டர் இவற்றில் ஏதாவது ஒன்று செயலிழந்தாலும் பல்பு ஒளிராது.
LED பல்பில் உள்ள எளிய குறைகள் கூட பல்பினை முழுமையாகச் செயல்பட அனுமதிக்காது.
LED பல்பின் முக்கியக் காரணிகள்
பழுதடைந்த LED பல்பு ஒன்றினைச் சோதனை செய்து கீழேயுள்ள பாகங்களைக் கண்டறியவும்.
(அலைதிருத்தி, லோட்மின்தடை, பில்டர் மின்தேக்கி, LED சிப், வெப்பசிங்)
பழுதடைந்த LED பல்பின் குறைகளைப் போக்குவதற்குத் தேவையான
கருவிகள்
a) பற்றாசுக்கோல்
b) மல்டி மீட்டர்
c) டெஸ்டர்
d) ஸ்குறு டிரைவர்
e) LED சிப்
f ) நோஸ் பிளையர்
g) டீசர்
பழுதடைந்த பல்பினைத் திறந்த பின்னர் அதிலுள்ள பாகங்கள் செயல்படு கிறதா என மல்டி மீட்டர் வைத்துப் பரிசோதிக்கவும்.
கீழே தரப்பட்டுள்ள LED பல்பின் பாகங்களில் பழுதடைந்தவற்றை மல்டி மீட்டரைப் பயன்படுத்தி கண்டறிந்தபின் அவற்றை மாற்றி புதியனவற்றைப் பொருத்தவும்.
a) அலைதிருத்தி
b) லோடு மின்தடை
c) பில்டர் மின்தேக்கி
d) LED சிப்
LED பல்புகளை அறிவியல் முறையில் அழித்தலுக்குட்படுத்துவது எவ்வாறு?
ஒவ்வொரு LED பல்பின் பிளாஸ்டிக் பாகங்கள் உலோக பாகங்கள், எலக்ட்ரானிக் பாகங்கள் என்பனவற்றை வேறுபடுத்தி எடுக்கவும்.
இவற்றை அழிக்கும் இடங்களில் கொண்டு சேர்க்கவும்.
சுற்றுப்புறச் சூழலை மாசற்றதாகவும் ஆற்றல் பாதுகாப்பிற்கு உதவும் முறையிலும் LED பல்புகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
ஆற்றலை பாதுகாத்தல் ஆற்றலை உருவாக்குவதற்குச் சமம் ஆகும்
ஆண்லைன் வினா விடைக்காக இங்கே சொடுக்கவும்
STUDENT'S RESPONSE











