மின்னிறக்க விளக்குகள் ஒரு கண்ணாடிக்குழாயினுள் மின்வாய்கள் பொருத்தப்பட்டிருப்பதே மின்னிறக்கவிளக்குகள் ஆகும...
மின்னிறக்க விளக்குகள்
ஒரு கண்ணாடிக்குழாயினுள் மின்வாய்கள் பொருத்தப்பட்டிருப்பதே மின்னிறக்கவிளக்குகள் ஆகும்.
சோடியம் ஆவி விளக்கு, வில் விளக்கு, ஒளிரும் விளக்கு, சி.எப்.எல் இவை மின்னிறக்க விளக்குகள் ஆகும்.
இது ஒளிர்வது அதன் உள்ளே நிரப்பப்பட்டுள்ள வாயுக்களில் நடைபெறும் மின்னிறக்கத்தினாலாகும்.
அதிகமான மின்னழுத்த வித்தியாசம் அளிக்கும் போது வாயுவின் முலக்கூறுகள் உயர்ந்த ஆற்றல் நிலையை அடைகின்றன (Excited state). இந்த மூலக்கூறுகள் சாதாரண ஆற்றல் நிலையை அடைந்து நிலைத் தன்மையை அடையும்போது அதிகமான ஆற்றலைக் கதிர்வீச்சாக வெளிவிடுகின்றன.
ஆற்றல் வித்தியாசத்திற்கேற்ப பல்வேறு நிற ஒளிகளும் கதிர்வீச்சுகளும் கிடைக்கிறது.
அதன் உள்ளே நிரப்பப்பட்டுள்ள வாயுக்களைப் பொறுத்து வெளிவிடும் ஒளியின் நிறம் அமையும்.
மின்னிறக்க விளக்குகள் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்
வெளிவிடும் வெப்பம் குறைவு.
அதிக திறன் கொண்டது.
குளிர்ச்சியான ஆற்றல் உறைவிடம்.
ஆயுள் அதிகம்.
நிழல் குறைவு.
ஒரு மின்விளக்கை தேர்வு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்.
குறைந்த திறனில் செயல்பட வேண்டும்.
வெப்ப இழப்பு குறைவானதாக இருக்க வேண்டும்.
அதிக ஒளியைத் தரவேண்டும்.
சுற்றுப்புற சூழலை பாதிக்கக் கூடாது.
ஆயுள் அதிகம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஆண்லைன் வினா விடைகளுக்காக இங்கே சொடுக்கவும்
STUDENT'S RESPONSE