அறுசுவை அருஞ்சுவை Anitha. V - SVVHSS, ERUTHENPATHY இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு , கார்ப்பு, துவர்ப்பு என சுவைகள் ஆறு வகைப்படும். இரத...
அறுசுவை அருஞ்சுவை
Anitha. V - SVVHSS, ERUTHENPATHY
- இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு , கார்ப்பு, துவர்ப்பு என சுவைகள் ஆறு வகைப்படும்.
- இரத்தம், தசை, கொழுப்பு , எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் கொண்டு யாக்கப்பட்டது மனித உடல்.
- ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க, முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் வேண்டும்.
- ஆறு தாதுக்களும் ஆறு சுவைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
துவர்ப்புச் சுவை - நன்மைகள் :
- அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும்.
- இரத்தப் போக்கினைக் குறைக்கும்.
- வயிற்றுப் போக்கினைச் சரி செய்யும்.
அதிகமாயின் தீமைகள் :
- இளமையில் முதுமை தோற்றம்.
- வாய் உலர்ந்து போகும் .
- சரளமாகப் பேசுவது பாதிக்கும்.
- வாத நோய்கள் தோன்றும்.
துவர்ப்புச் சுவைப் பொருட்கள் :
வாழைக்காய், மாதுளை, மாவடு, அவரை, அத்திக்காய்.
இனிப்புச்சுவை - நன்மைகள் :
- மனதிற்கும் உடலுக்கும் உடனடி உற்சாகம் தரும் .
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
அதிகமாயின் தீமைகள் :
உடல் தளர்வு, சோர்வு ,அதிகத் தூக்கம், இருமல், உடல் எடை கூடுதல்.
இனிப்புச்சுவைப் பொருட்கள் :
பழவகைகள் ,உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி ,கோதுமை போன்ற தானியங்கள் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள்.
புளிப்புச்சுவை - நன்மைகள் :
- பசியுணர்வைத் துண்டும்.
- நரம்புகளை வலுப்பெறச் செய்யும்.
- இதயத்திற்கும் செரிமானத்திற்கும் நல்லது.
அதிகமாயின் தீமைகள் :
- தாக உணர்வு அதிகரிக்கும்.
- பற்கள் பாதிக்கப்படும்
- இரத்தக் கொதிப்பு ,அரிப்பு போன்ற தொந்தரவுகள் தரும்.
- உடலைத் தளரச் செய்யும்.
புளிப்புச்சுவைப் பொருட்கள் :
எலுமிச்சை, புளித்தகீரை, தக்காளி ,புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய், இட்லி, தோசை.
காரச்சுவை - நன்மைகள் :
- பசியுணர்வைத் தூண்டும்.
- செரிமானத்திற்கு உதவும்.
- உடல் இளைக்கச் செய்யும்.
- உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றும்.
- இரத்தம் சுத்திகரிக்கும்.
- தோல் நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும்.
அதிகமாயின் தீமைகள் :
- உடல் எரிச்சல் ஏற்படும் .
- உடல் சூடு அதிகரிக்கும் .
- வியர்வை அதிகம் சுரக்கும்.
- குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு.
காரச்சுவைப் பொருட்கள் :
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு.
கசப்புச்சுவை - நன்மைகள் :
- தாக உணர்வைக் கட்டுப்படுத்தும் .
- உடல் எரிச்சல் அரிப்புகளில் இருந்து நிவாரணம் தரும் .
- காய்ச்சல் தணியும்.
- இரத்தச் சுத்திகரிப்பு செய்யும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும்.
அதிகமாயின் தீமைகள் :
- உடலில் நீர் குறைந்துப் போகச் செய்யும்.
- மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்றும்.
- எலும்புகளைப் பாதிக்கும் .
- அடிக்கடி மயக்கம் உண்டாகும்.
- உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்குச் செல்ல வழிவகுக்கும்.
கசப்புச்சுவை பொருட்கள் :
பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம்.
உவர்ப்புச்சுவை - நன்மைகள் :
- உமிழ்நீரை சுரக்கச் செய்யும்.
- மற்ற சுவைகளைச் சமன் செய்யும்.
- உணவு செரிமானத்தில்பங்கு வகிக்கும்.
அதிகமாயின் தீமைகள் :
- தோல் தளர்வினை உண்டுவித்து,
- சுருங்கிப் போகச் செய்யும்.
- தோல் வியாதிகள் தோன்றச் செய்யும். *உடல் சூட்டினை அதிகப்படுத்திச் ,சிறு கட்டிகள் , பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.
உவர்ப்புச் சுவை பொருட்கள் :
கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய் ,சுரைக்காய், பீர்க்கங்காய்.
வாழை இலையின் நன்மைகள் :
- பசியுணர்வைத் தூண்டும்.
- தோல் பளபளக்கும்.
- மந்தம், வலிமைக்குறைவு , இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.
- பித்தம் தணியும்.
- இளநரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
- இது ஒரு கிருமிநாசினி.
- பச்சையம் உணவை எளிதில் சீரணம் அடையச்செய்யும் .
- வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
- தீக்காயத்தின் அரிச்சலைப் குறைக்கும்.