ஈஸ்டர் தீவு தென் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. 63 சதுர மைல் நிலப்பரப்பு கொண்ட ஈஸ்டர்...
- ஈஸ்டர் தீவு தென் அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
- 63 சதுர மைல் நிலப்பரப்பு கொண்ட ஈஸ்டர் தீவிற்கு அருகே 1000 மைல்களுக்கு நிலமே கிடையாது.
- உலகிலேயே மிகத் தனிமையான தீவும் இதுதான்.
- ஈஸ்டர் தீவு எரிமலைகளால் உண்டானது.
- 1959 இல் இத்தீவின் மொத்த மக்கள் தொகை 159 பேர்.
- ஈஸ்டர் தீவு மக்களுக்கு கடல் தரும் உணவுதான் முக்கிய உணவு.
- ஈஸ்டர் தீவில், 1987 இல் அமெரிக்காவுக்கு விண்வெளிப் பயண விண்கலம் இறக்க பெரிய விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது.
- ராப்ப நூயி என்று மக்களால் அழைக்கப்படும் இத்தீவிற்கு 1722 இல் டச்சுக்காரர் ஜேக்கப் ரோகவீன், ஈஸ்டர் ஞாயிறன்று முதன்முதலில் வந்து இறங்கியதால் இது ஈஸ்டர் தீவு என்று அழைக்கப்பட்டது.
- மிகப்பழமையான பழக்க வழக்கங்களை உடைய இத்திவில் வசிக்கும் மனிதர்கள், ஹவாய் தீவில் உள்ள பாலிநேசியன் மக்கள் போல் முகச்சாடையும் உடலமைப்பும் கொண்டவர்களாக உள்ளனர்.
- இயற்கையை வழிபட்ட இம்மனிதர்கள், எரிமலைப் பாறைகளில் 6 அடியிலிருந்து 30 அடி வரை உயரமான, மிகப்பெரிய மோய் என்று அழைக்கப்படும் சிற்பங்களைச் செதுக்கி அனகீனா கடற்கரையில் நிறுத்தி உள்ளனர்.
- சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான கற்களை உளியாகப் பயன்படுத்தி 82 டன் கொண்ட பெரிய சிலையை வெறும் மரங்களையும் கயிற்றையும் வைத்து பல கிலோ மீட்டர் நகர்த்தி கடற்கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
- இச்சிலைகளை அத்தீவின் மக்கள் தங்கள் முன்னோர்களாகவும் அவர்களை ஆபத்துகளி லிருந்து காப்பவர்களாகவும் கருதுகிறார்கள்.
- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலே, இத்தீவைத் தன் ஆட்சிக்கு உட்படுத்திய பிறகு, இத்தீவின் மக்களுக்கு உணவு இறக்குமதி, உல்லாசப் பயணிகள் வரவு, உலக அரங்கில் ஓர் அறிமுகம், ஐக்கிய நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவன ஈர்ப்பு ஆகிய உதவிகள் கிடைத்தன.
- பல நூற்றாண்டுகளுக்கு முன் மக்கள் தோணிகளில், தென் அமெரிக்காவிலிருந்து வந்து சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வாழை, கரும்பு போன்றவற்றைப் பயிர் செய்திருக்க வேண்டும்.