மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயும்போது வெப்ப ஆற்றல் உருவாகும் செயல்பாடு ஜூல் வெப்பமாதல் எனப்படும். மின் கடத்தியில் தோற்றுவிக்கப்படும் ...
- மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயும்போது வெப்ப ஆற்றல் உருவாகும் செயல்பாடு ஜூல் வெப்பமாதல் எனப்படும்.
- மின் கடத்தியில் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தின் அளவு மூன்று காரணிகளை சார்ந்துள்ளது. 1.மின்னோட்டத்திவிராம் I , மின்தடை R , மின்னோட்டம் ஒழுகும் நேரம் t,
- ஜூல் விதி: மின்னோட்டம் பாய்கின்ற ஒரு கடத்தியில் தோற்றுவிக்கப்படும் வெப்பத்தின் அளவு மின்னோட்டத் தீவிரத்தின் இருமடி, கடத்தியின் மின்தடை, மின்னோட்டம் பாயும் நேரம் இவற்றின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்தில் அமையும். H= I
- ஒரு கடத்தியின் வழியாக உள்ள மின்னோட்டத்தீவிரம் இரண்டு மடங்கு ஆகும் போது தோற்றுவிக்கப்படும் வெப்பம் 4 மடங்கு ஆகும்.
- மின்னழுத்ததில் மாற்றம் இல்லையெனில் மின்தடையும், உருவாகும் வெப்பமும் எதிர்விகிதத்தில் இருக்கும்.
- மின்தடையாக்கிகள் தொடரிணைப்பில் இணைக்கும்போது அதன் நிகரமின்தடை கூடுகிறது.
- மின்சுற்றில் மின்தடையாக்கிகளைத் தொடரிணைப்பில் இணைக்கும்போது மொத்த மின்தடை மின்தடையாக்கிகளின் கூட்டுத்தொகையாக இருக்கும்.
- பக்க இணைப்பில் ஒவ்வொரு மின்தடையாக்கியையும் தனித்தனி சுவிட்சு பயன்படுத்தி கட்டுப்படுத்த இயலும்.
- மின்தடையாக்கிகளை பக்கஇணைப்பில் இணைத்தால் மொத்த மின்தடை
- r மின்தடையுள்ள n மின்தடையாக்கிகளைப் பக்க இணைப்பில் இணைத்தால் மொத்த மின்தடை R=r/n
- இரண்டு மின்தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைத்து அதற்கு மின்னழுத்தம் கொடுக்கப்படுகிறது எனில் இரண்டு மின்தடையாக்கிகளிலும் மின்னழுத்தம் சமமாக இருக்கும்.
- மின்னழுத்தம்நிலையாகயிருக்கும்போது மின்சுற்றில் மின்தடை அதிகரித்தால் மின்சாரம் குறையும்.
பயிற்சி வினா - விடை