குறிஞ்சி மலர் மலை மலை என்ற இக்கவிதையை இயற்றியவர் கவிஞர் பூரணி. மலை பரந்து, விரிந்து, நிமிர்ந்து, உயர்ந்து காணப்படுகிறது. ஆகாயத்தில் உருவாகும...
குறிஞ்சி மலர்மலை
- மலை என்ற இக்கவிதையை இயற்றியவர் கவிஞர் பூரணி.
- மலை பரந்து, விரிந்து, நிமிர்ந்து, உயர்ந்து காணப்படுகிறது.
- ஆகாயத்தில் உருவாகும் கார் மேகங்கள் மலையைத் தழுவிச் செல்வது போல மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.
- மரங்கள் அடர்ந்து வளர்ந்த உடலுடன் மலையானது, இந்த உலகத்தை ஆட்சி செய்கிறது.
- விடங்கள் (விஷம்) நிறைந்த பாம்பு முதல் கொல்லுகின்ற அனைத்து விலங்கினங்களும் நன்கு வாழவும், தங்களது இனங்களை விரிவாக்கவும், எந்த ஒரு தடங்கலும் இன்றி மலையானது இடம் கொடுக்கிறது.
- தமது கொடிய குணங்களை சிரித்து மறைக்கும் மனிதனை விட மலை மேன்மையானது.
- மலையில் இயற்கையாக உருவாகும் நீர் ஊற்றானது , பாறைச் சரிவில் பாய்ந்து, தரையில் விழுந்து, அலைகளாகவும், சுழி களாகவும், நீர்த்துறைகளாகவும், நதியாகவும் உருமாறி இவ்வுலகில் உயிர்கள் வாழ உதவுகிறது.
- அசையாமல் ஓரிடத்தில் இருந்து கொண்டு இவ்வுலகில் பலரின் துயரை அகற்றி,மலை உயர்வடைகிறது.