d பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள் d பிளாக் தனிமங்களுக்கு இடைநிலைத் தனிமங்கள் என்ற பெயரும் உண்டு. இவை உலோகங்களாகும். கடைசி எலக்ட்ரான் நிர...
d பிளாக் தனிமங்களின் சிறப்பியல்புகள்
- d பிளாக் தனிமங்களுக்கு இடைநிலைத் தனிமங்கள் என்ற பெயரும் உண்டு.
- இவை உலோகங்களாகும்.
- கடைசி எலக்ட்ரான் நிரப்புவது வெளிப்புற ஷெல்லிற்குத் தொட்டு முன்னாள் உள்ள ஷெல்லிலாகும்.
- ஆவர்த்தன அட்டவணையில் 3 முதல் 12 வரைத் தொகுதிகளில் காணப்படுகின்றன.
- இடைநிலைத் தனிமங்களின் வெளிப்புற ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு ஒரே தொகுதியிலும் ஆவர்தனத்திலும் ஒரே மாதிரியானவை ஆகும். எனவே இவை தொகுதியில் மட்டுமின்றி ஆவர்தனத்திலும் பண்புகளில் ஒற்றுமையைக் காட்டுகின்றன.
- இவை வேறுபட்ட ஆக்சிஜனேற்ற நிலையைக் காட்டுகிறது.
d பிளாக் தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலை
- வேதிப்பிணைப்பில் ஈடுபடும் அணுக்கள் விட்டுகொடுக்கவோ , பெற்றுக்கொள்ளவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ செய்கின்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே இணைதிறனாகும்.
- d பிளாக் தனிமங்கள் எலக்ட்ரானை விட்டுக்கொடுத்தோ அல்லது எலக்ட்ரானை பெற்றுக்கொண்டோ ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது.
சேர்மங்கள் | Fe யின் | Fe அயனிகளின் |
Fecl2 | +2 | Fe +2 |
Fecl3 | +3 | Fe +3 |
- d பிளாக் தனிமங்கள் வேதிவினையில் ஈடுபடும்போது எலக்ட்ரான் நிரப்புதல் வெளிப்புற ஷெல்லான d பிளாக்கில் நிரம்புகிறது. ஆனால் எலக்ட்ரான் இழப்பு ஏற்படும்போது s துணை ஷெல்லிலிருந்து எலக்ட்ரான் முதலில் இழக்கப்படுகிறது.
- Fe யின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2
- Fe இரண்டு எலக்ட்ரான்களை விட்டுக்கொடுத்து Fe2 + ஆக மாறுகிறது. இதன் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6
- Fe மூன்று எலக்ட்ரான்களை விட்டுக்கொடுத்து Fe3+ ஆக மாறுகிறது. இதன் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d5
- அணு எண் 25 உடைய தனிமம் மாங்கனீஸ்(Mn). இதன் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2
- இதன் பல்வேறு சேர்மங்கள் அதன் ஆக்ஜிசனேற்ற நிலை மற்றும் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Mn யின் ஆக்சிஜனேற்ற நிலை கண்டுபிடிக்கும் முறை :
Mn ஐ x என்று கருத்திக்கொள்ள வேண்டும். Cl-யின் ஆக்சிஜனேற்ற நிலை -1, O-யின் ஆக்சிஜனேற்ற நிலை -2
MnCl2 | MnO2 | Mn2O3 | Mn2O7 |
X+2*(-1) =0 | X+2*(-2) = 0 | X2+3*(-2) =0 | X2+7*(-2) = 0 |
X-2 =0 | X-4 = 0 | X2-6 = 0 | X2-14 = 0 |
X = +2 | X = +4 | X2=+6 | X2=+14 |
|
| X = +6/2 | X = +14/2 |
|
| X = +3 | X = +7 |
சேர்மங்கள் | Mn யின் | Mn அயனிகளின் துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு |
MnCl2 | +2 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 |
MnO2 | +4 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 |
Mn2O3 | +3 | 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 |
Mn2O7 | +7 | 1s2 2s2 2p6 3s2 3p6 |
இடைநிலைத் தனிமங்களினின் வெளிப்புற S துணை ஷெல்லிற்கும் அதற்க்கு முன்னாள் உள்ள d துணை ஷெல்லிற்கும் இடையே ஆற்றல் வித்தியாசம் மிக குறைவானதால் பொருத்தமான சூழ்நிலையில் d துணை ஷெல்லலிலுள்ள எலக்ட்ரான்களும் வேதிவினையில் பங்கு கொள்கிறது. இதனால் இவை வேறுபட்ட ஆக்சிஜனேற்ற நிலையைக் காட்டுகிறது.
நிறமுள்ள சேர்மங்கள் :
இடைநிலை தனிமங்களின் சேர்மங்கள் பெரும்பாலும் நிறமுள்ளவை ஆகும். இதற்கு காரணம் இவற்றிலுள்ள அயனிகளின் முன்னிலை ஆகும். (எடுத்துக்காட்டு : காப்பர் சல்பேட், கோபால்ட் நைட்ரேட், பொட்டாசியம் பெர்மாங்கனேட், பெர்ரஸ்சல்பேட்)
இடைநிலை தனிமங்களின் பயன்கள் :
கண்ணாடிக்கு நிறமளிக்கும் ஆயில் பெயிண்ட் தயாரிக்க இத்தனிமங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இடைநிலை தனிமங்களும் அவற்றின் சேர்மங்களும் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப் படுகிறது. (எடுத்துக்காட்டு: வெனேடியம் பெண்டாக்சைடு, ஸ்பாஞ்சயன், நிக்கல்)