Part - 1 S,P பிளாக் தனிமங்களின் எலக்ட்ரான் கட்டமைப்பு , துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு, ஆவர்த்தனம் மற்றும் தொகுதி அணுக்கருவில் இருந்து ...
Part - 1
S,P பிளாக் தனிமங்களின் எலக்ட்ரான் கட்டமைப்பு ,
துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு,
ஆவர்த்தனம் மற்றும் தொகுதி
- அணுக்கருவில் இருந்து தொலைவு அதிகரிப்பதற்கேற்ப ஷெல்களிள் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் அதிகரிக்கிறது ஆனால் அணுக்கருக்கும் எலக்ட்ரானுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசை குறைகிறது
- துணை ஷெல்கள் s,p,d,f . அதில் உட்கொள்ளக்கூடிய அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை S யில் 2, p யில் 6, d யில் 10, f யில் 14·
- துணை ஷெல்களில் ஆற்றல் அதிகரித்து வரும் வரிசை 1s < 2s < 2p < 3s< 3p<4s< 3d < 4p<5s
- கடைசி எலக்ட்ரான் நிரம்பிய துணை ஷெல் எதுவோ அதுவே அதன் பிளாக் எடுத்துக்காட்டு : பெர்லியம் (4Be) துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s2 2s2 இதன் பிளாக் = S
- துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பிலுள்ள வெளிப்புற ஷெல் எண் அதன் ஆவர்த்தன எண் ஆகும்.
எடுத்துக்காட்டு : குளோரின் (17Cl) துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s2 2p6 3s2 3p5 இதன் ஆவர்த்தம் = 3 - S பிளாக் தனிமங்களின் வெளிப்புற S துணை ஷெல்லிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே அதன் தொகுதி எண் எடுத்துக்காட்டு: சோடியம் (11Na), துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு: 1s22s2 2p6 3s1 இதன் தொகுதி =1
- P பிளாக் தனிமங்களின் வெளிப்புற P துணை ஷெல்லிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையுடன்12 ஐ கூட்டினால் கிடைக்கும் எண்ணே அதன் தொகுதி எண் எடுத்துக்காட்டு: போரான்(5B) , துணை ஷெல் எலக்ட்ரான் கட்டமைப்பு: 1s22s2 2p1 இதன் தொகுதி 1+12=13
- மந்த வாயு தனிமங்கள் அனைத்தும் P பிளாக்கையும், 18 வது தொகுதியையும் சார்ந்தது.
Students Responses :