வகுப்பு-10- இயற்பியல்-பாடம்-1 மின்னோட்டத்தின் விளைவுகள் -பாகம்:2 மின் வெப்பக் கருவிகளில் சூடாகும் சுருள் தயாரிப்பது நிக்ரோம...
மின் வெப்பக் கருவிகளில் சூடாகும் சுருள் தயாரிப்பது நிக்ரோம் பயன்படுத்தியாகும்.
உயர்ந்த மின்தடை, உயர்ந்த உருகுநிலை, செஞ்சிவப்பு நிலையில் ஆக்சிசனேற்றமடையாமல் நீண்ட நேரம் இருப்பதற்கான திறன் போன்றவை நிக்ரோமின் பண்புகளாகும்.
டின், லெட் சேர்ந்த உலோகக்கலவை கொண்டு தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு மின் உருகு இழையின் முக்கிய பண்பு தாழ்ந்த உருகுநிலையாகும்.
ஒரு அலகு நேரத்தில் ஒரு மின் கருவி பயன்படுத்துகின்ற மின்னாற்றலே மின்திறன். இதன் அலகு வாட் ஆகும்
பல்பை கோல்டருமாய் இணைக்கும் உலோகத்தின் பாகம் பேஸ் யூனிட்டின் பயன் ஆகும்.
ஒரு கருவியின் திறனுக்கும் அதில் தரப்பட்டுள்ள மின்னழுத்தத்திற்கும் இடையேயுள்ள விகிதமே அந்தக் கருவியின் ஆம்பியர் ஆகும்.
திறனை கணக்கிட உதவும் சமன்பாடுகள் p=I2R, P=IV, P=V2/R போன்றவை.
வெப்பத்தால் ஒளிரும் விளக்கின் மின்னிழை டங்ஸ்டன் என்ற
உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இழை ஆவியாவதைக் குறைக்க மந்த வாயு நிரப்பப்பட்டுள்ளது.மின்விளக்குகளில் மந்த வாயு நிரப்பப்படக் காரணம் இழை ஆவியாவதைத் தடை செய்ய.
வெப்பத்தால் ஒளிரும் விளக்கிற்கு பதிலாக மின்னிறக்கு விளக்குகள் பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பை குறைக்க முடியும்.
வெப்பத்தால் ஒளிரும் விளக்கை விடவும் மின்னிறக்கு விளக்கை விடவும் குறைந்த திறனிலும் கூடுதல் ஒளியை தருவதுமான ஒரு ஒளிரும் கருவி LED பல்பு ஆகும்.